பதிவுகள் மூடப்பட்டன

உங்கள் பயிற்றுவிப்பாளரைச் சந்திக்கவும்

ரஞ்சித் கோவிந்த்

பாடகர், ஒலிப்பதிவாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர்
ரஞ்சித் 2002 இல் சன் டிவியின் சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியில் தனது மெய்சிலிர்க்க வைக்கும் பாடும் திறமையால் இறுதிச்சுற்றிற்குச் சென்று, வெற்றியாளராக வெளிப்பட்ட பிறகு, பின்னணிப் பாடகராக தனது பயணத்தை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
ரஞ்சித் ஒரு பயிற்சி பெற்ற கர்நாடக பாடகர். PS நாராயண சுவாமி, வித்வான் ஸ்ரீ கடலூர் சுப்பிரமணியம், ஸ்ரீ KS கனகசிங்கம் மற்றும் ஸ்ரீ திருச்சூர்.பி ராமன்குட்டி போன்ற புகழ்பெற்ற இசைக் குருக்களின் வழிகாட்டுதலுடன் அவர் தனக்கென ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொண்டார். அவரது இசைப் பாணியானது ராக், கிளாசிக்கல், RnB,அல்ட்டர்நேட்டிவ் ராக், ஹிப்-ஹாப், நாட்டுப்புறப் பாட்டு & EDM ஆகியவற்றைத் தழுவியிருக்கும்.
ரஞ்சித் முறையே ஸ்ரீ கேதார் காரத் மற்றும் திரு அகஸ்டின் பால் ஆகியோரிடம் இந்துஸ்தானி கிளாசிக்கல் மற்றும் மேற்கத்திய பாரம்பரிய இசையையும் கற்றுள்ளார். பியானோ, கிட்டார் மற்றும் மிருதங்கம் போன்ற இசைக்கருவிகளில் ரஞ்சித் கொண்ட திறமையானது, பின்னணிப் பாடல் மற்றும் கிளாசிக்கல் கச்சேரிகளிலிருந்து இண்டிப்பென்டென்ட் பாடல்கள் மற்றும் ஜிங்கிள்களை உருவாக்குவது வரை அவரது இசை எல்லைகளை விரிவுபடுத்த உதவியது.
இசை ஜாம்பவான்களான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், மணி சர்மா, வித்யா சாகர், பரத்வாஜ், யுவன் ஷங்கர் ராஜா, கார்த்திக் ராஜா, டி.இம்மான், அனிருத், ஹாரிஸ் ஜெயராஜ், எஸ்.ஏ.ராஜ்குமார், தமன்.எஸ், சுந்தர், தீபக் தேவ், ஓசேப்பச்சன் மற்றும் பல புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் பணிபுரியும் வாய்ப்பையும் அவரது பின்னணிப் பயணம் அவருக்கு அளித்துள்ளது.

பகிரக்கூடிய சான்றிதழ்

கோர்ஸ் முடித்தவுடன் பகிரக்கூடிய சான்றிதழைப் பெறுங்கள்.

100% ஆன்லைன் வகுப்புகள்

100% ஆன்லைன் படிப்புகளை மேற்கொள்ள எங்கள் தளத்திற்குச் செல்லுங்கள்.

தொழிலாகப் பின்பற்றுதல்

உங்கள் ஆர்வத்தைத் தொடர பல்வேறு வழிகளைப் புரிந்துகொண்டு அதை ஒரு தொழிலாக மாற்றுங்கள்!

உகந்த கற்றல்

உங்கள் இசை விருப்பங்களுக்கேற்றவாறு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கோர்ஸ்களை நாங்கள் வழங்குகிறோம்.

உங்கள் தனித்துவமான குரலைக் கண்டறியவும்!

இந்த கோர்ஸ் யாருக்காக?

பாடுவதில் ஆர்வம் கொண்ட அனைவருக்குமே!

சுயமாகக் கற்பவர்கள்

பாடலின் அடிப்படைகளைக் கற்றுக்கொண்டு கலையுடன் தங்கள் பயணத்தைத் தொடங்க விரும்பும் எவரும்.

ஆர்வமுள்ள இசைக்கலைஞர்கள்

ஏற்கனவே இசையில் அடித்தளம் உள்ளவர்கள், ஆனால் பாடுவது குறித்த தங்கள் அடிப்படைகளையும் கருத்தியல் புரிதலையும் வலுப்படுத்த விரும்புபவர்கள்.

பொழுதுபோக்கு ஆர்வலர்கள்

தங்கள் பொழுதுபோக்கை ஆராயவும், பாடலின் அஸ்திவாரங்களையும் புரிந்துகொள்ளவும் விரும்புபவர்கள்.

இளைஞர்கள்

பாடுவதில் ஈடுபாடு கொண்ட இளைஞர்களுக்கு இந்த கோர்ஸ் பயனுள்ளதாக இருக்கும்

பிஸியான ஊழியர்கள்

நீங்கள் ஒரு பிஸியான, எப்பொழுதும் பணியில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் தொழில் நிபுணர் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனாலும், உங்கள் ஆர்வத்தைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஒரு இடைவெளி எடுங்கள்… எங்களுடன் சேருங்கள்!

அனைவரும்

இசையில் முன் அறிவு பெற்றவர்கள், புதிதாகக் கற்றுக்கொள்பவர்கள், சில நாட்கள் ஓய்வெடுத்து, ஏதாவது ஒன்றைக் கற்றுக் கொண்டு மன அழுத்தத்தைக் குறைக்க விரும்பும் பிஸியாக இருக்கும் தொழில் வல்லுநர்கள், தங்கள் சாதனைகள் மற்றும் திறமைகளின் பட்டியலில் சேர்க்க விரும்பும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள்.

நீங்கள் என்ன கற்றுக்கொள்வீர்கள்?

சுவாச நுட்பங்கள்

குரல் பயிற்சி

சுருதி சரிசெய்தல்

இசையின் கோட்பாடுகள்

பாடும் திறன்களை வெளிப்படுத்துதல்

குரல் மூலம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல்

இசையின் அடிப்படை புரிதல்

குரல் பண்பேற்றம்

செவிமடுப்பு

உங்கள் தொனியை மாற்றியமைப்பதன் மூலம் உங்கள் சுவாசத்தை கட்டுப்படுத்துவது மற்றும் ஸ்வரங்களை உருவாக்குவதன் அடிப்படைகள்.

நீங்கள் விரும்பும் எந்தப் பாடலையும் எடுத்து உங்கள் குரல் மற்றும் சுருதி விருப்பங்களுக்கு ஏற்றவாறு மாற்றுவது.

உங்கள் குரல் வரம்பை வலுப்படுத்துவதற்கும், உங்கள் குரலின் சக்தி மற்றும் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதற்கும் ஸ்கேல்களை பயன்படுத்துவது.

டெம்போ மற்றும் ரிதம் ஆகியவற்றின் அடிப்படைகளை தெரிந்துகொள்ளுதல் மற்றும் உங்கள் இசையை உலகத்துடன் கொள்ளுதல்.

இந்த கோர்ஸ் பற்றி

PaatuClass மூலம், பாடகர் ஆவதற்கான பாதையை ஆராய உங்கள் பாடல் பயணத்தின் முதல் படியை நீங்கள் இப்போது எடுக்கலாம். PaatuClass உங்கள் தனித்துவமான குரல் பாணியை ஆராய்ந்து திறம்பட பாடுவதற்கான அத்தியாவசிய திறன்களை உங்களுக்கு வழங்குகிறது.
ஸ்வரங்களின் சாராம்சத்தைப் புரிந்துகொண்டு, அவற்றை திறம்பட உருவாக்கும் அடிப்படைக் கருத்துக்களுடன் இந்த கோர்ஸ் தொடங்குகிறது. PaatuClass -இல் உங்கள் சொந்த குரலை ஆராய்ந்து அதை எவ்வாறு திறம்பட உபயோகிப்பது என்பதை கற்றுக்கொள்வீர்கள். பாடுவதன் அடிப்படையான பல்வேறு கருத்துகளைப் புரிந்துகொண்டு, அதிலிருந்து உங்கள் சொந்த பாணியை உருவாக்குவது, உங்கள் குரல் கட்டுப்பாட்டை மேம்படுத்துவது மற்றும் உங்களுக்கான குரல் வரம்பை அடையாளம் காண்பது பற்றியும் கற்றுக்கொள்வீர்கள்.
நீங்கள் அடுத்தடுத்த கட்டத்திற்குச் செல்லும் போது, டெம்போவுடன் ஒத்திசைக்கும் திறனை வளர்த்துக் கொள்வீர்கள். மேலும், நேரத்தின் அடிப்படைகள், வெவ்வேறு தாள வடிவங்களை ஆராய்வது மற்றும் பாடல் வரிகளை உச்சரிக்கும் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உங்கள் விருப்பப்படி ஒரு பாடலை எவ்வாறு மாற்றுவது மற்றும் அதை உங்களுக்கு சொந்தமாக்குவது எப்படி என்பதையும் நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். இதைத் தொடர்ந்து உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்தல் மற்றும் உலகத்துடன் பகிர்ந்து கொள்வது பற்றிய ஆழமான பாடத்தையும் காண்பீர்கள்.
எங்கள் பயிற்றுவிப்பாளர், ரஞ்சித் கோவிந்த், இசைத்துறையில் அவரது வெற்றிகரமான வாழ்க்கைக்கு பங்களித்த அவரது தனிப்பட்ட நுண்ணறிவுகளையும், உங்கள் சொந்த பாடல் பயணத்தில் அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதையும் பகிர்ந்து கொள்வார். இந்த பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்தவுடன், உங்கள் சொந்த குரல் பாணியில் நீங்கள் நம்பிக்கையுடன் பாட முடியும், மேலும் ஒரு கலைஞராக உங்கள் வேலையைப் பகிர்வதில் அடுத்த படியை எவ்வாறு எடுக்கலாம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள்.
முன்தேவைகள்

இந்தப் படிப்பை மேற்கொள்வதற்கு உங்களுக்கு இசையில் எந்த முன் அறிவும் தேவையில்லை! உங்கள் ஆர்வத்திற்கு உயிர் கொடுக்க உதவும் ஒரு அடித்தளத்தை நிறுவுவதையே நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்!

கால அளவு

PaatuClass இன் நிலை 1 ஒரு 8 வாரப் பாடமாகும்.

கற்றல் அளவீடு

வகுப்புகள் ஊடாடும் முறையில், பாடத் திட்டங்கள் மற்றும் பணிகளால் நிரப்பப்பட்டு, கலையை மேலும் ஆராய உங்களைத் தூண்டும்.

குரல் மூலம் வெளிப்பாடு

தி பள்ளிக்கூடத்தில் கலை வடிவங்கள் மூலம் கேட்கவும், அதன் மூலம் உங்களை வெளிப்படுத்தவும் நாங்கள் உங்களை ஊக்குவிக்கிறோம். இசையை எவ்வாறு பாராட்டுவது என்பதை எங்கள் பாடநெறி உங்களுக்குக் கற்பிக்கும்.

இது எப்படி செயல்படுகிறது

பாடங்கள் மற்றும் வீட்டுப்பாடங்களை முடியுங்கள்
திட்டமிடப்பட்ட அடிப்படையில் அனைத்து பாடங்களும் வீட்டுப்பாடங்களும் உங்களுக்கு வழங்கப்படும். பரிந்துரைக்கப்பட்ட நேரத்திற்குள் அவற்றை முடிக்கவும் மற்றும் பாடத்திட்டத்தின் போது வழங்கப்பட்ட பயிற்சி வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதிப்படுத்தவும். உங்கள் முன்னேற்றத்தை கண்காணிக்க உங்கள் கோர்ஸ் டாஷ்போர்டைப் பார்வையிடுங்கள், மேலும் சான்றிதழைப் பெறுவதற்கு நிலுவையில் உள்ள பணிகளை முடியுங்கள்.
ஆன்லைன் நேரலை வகுப்பில் கலந்து கொள்ளுங்கள்
உங்கள் பயிற்றுவிப்பாளர் ரஞ்சித் கோவிந்த் அவர்களுடனான லைவ் ஜூம் வகுப்புகளில் நீங்கள் கலந்துகொள்வதை உறுதிசெய்து கொள்ளுங்கள், ஏனெனில் அவர் பாடத்திட்டத்தை அணுகுவதற்கான பல்வேறு வழிகளை வழங்குவார், மேலும் செயல்முறை தொடர்பாக உங்களுக்கு இருக்கும் சில கேள்விகளுக்கும் அவர் பதில் அளிப்பார்.
சான்றிதழைப் பெற்றிடுங்கள்
பாடத்திட்டத்தை வெற்றிகரமாக முடித்தவுடன், உங்கள் சுயவிவரத்தில் சேர்ப்பதற்கு தி பள்ளிக்கூடத்திலிருந்து ஒரு சான்றிதழைப் பெறுவீர்கள். மேலும், இது எங்கள் தளத்தில் வரும் பல்வேறு மேம்பட்ட கோர்ஸ்களுக்கு உங்களைத் தகுதிபெறச் செய்யும்.

சான்றுகள்

தி பள்ளிக்கூடம் ஒரு சிறந்த மெய்நிகர் கற்றல் இடம்! கோர்ஸில் கற்பவர்களுடன் அவர்கள் கொண்டிருக்கும் தனிப்பட்ட ஈடுபாட்டின் அளவுதான் அவர்களை மற்றவற்றில் இருந்து வேறுபடுத்துகிறது. நான் கோர்ஸை மிகவும் ரசித்தேன், நிலை 2-ஐ ஆர்வமுடன் எதிர்பார்க்கிறேன்!.

Demo Image

அர்ஜுன் தம்பி
மாணவர்

paatu class எனது இசை அனுபவத்தை மாற்றியது. தமிழ் பாடல்களை மேம்போக்காக கேட்பதில் இருந்து, அவற்றின் நுணுக்கங்களை ரசிக்கக் கற்றுக்கொண்டேன். பாடல் பாடுவதன் வெற்றி மட்டுமல்லாது, அதைக் கற்றுக்கொள்வதன் மகிழ்ச்சியையும் மன அமைதியையும் இதில் அனுபவித்தேன். paatu class-க்கு மிக்க நன்றி!..

Demo Image

சுரேஷ் பாபு
தொழில்முறை நிபுணர்

குவைத்தில் இருக்கும் என் வீட்டில் இருந்து paatu class மூலம் எனது இசை பயணத்தைத் தொடங்கினேன். ரஞ்சித் ஒரு சிறந்த கலைஞர் மட்டுமல்லாது, தனது இசைப் பயணம் மற்றும் இசையின் மீதான அன்பையும் அனைவருடனும் பகிர்ந்துகொள்ளும் அர்ப்பணிப்பு மிக்க ஒரு ஆசிரியரும் கூட. இந்த கோர்ஸை ஆழமாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டு சென்றதற்கு தி பள்ளிக்கூடம் குழுவிற்கு மனமார்ந்த நன்றி.

Demo Image

ஹேசல் டிசோசா
தொழில்முறை நிபுணர்

அடிப்படைகளைக் கற்றுக் கொள்வது மட்டுமல்லாமல், நான் முன்பு படித்த அனைத்து அடிப்படைகளையும் தக்கவைத்துக்கொள்ள தி பள்ளிக்கூடத்தின் முழுமையான பாட வடிவமைப்புகள் எனக்கு உதவின. கோர்ஸின் ஒவ்வொரு முக்கிய அம்சத்தையும் நாங்கள் கற்றுக்கொள்கிறோம் என்பதை உறுதிப்படுத்த பயிற்றுவிப்பாளர்கள் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள்.

Demo Image

சூரஜ் நாயர்
ஆர்வமுள்ள இசைக்கலைஞர்

நான் ஒரு கர்நாடக இசைப் பாடகி, PaatuClass எனக்கு மிகவும் திறம்பட பயிற்சி அளித்து, எனது அடிப்படை இசையுடன் தொடர்பில் இருக்க உதவியது. இந்தக் கோர்ஸின் சிறப்பு என்னவென்றால், இது உங்கள் விருப்பங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு அதன் அடிப்படையில் உங்கள் கற்றலை உருவாக்குகிறது.

Demo Image

ஷைல்ஜா
ஓய்வுபெற்ற நிபுணர்

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. இந்தக் கோர்ஸில் யார் சேரலாம்?

பாடுவதில் ஆர்வமும் தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்த யாவரும்.

2. கோர்ஸின் அட்டவணை என்ன?

PaatuClass நிலை 1, ஒரு 8 வார கோர்ஸ். ஒரு திட்டமிட்ட அடிப்படையில் மாணவர்களுக்கு பாடங்களுக்கான அணுகல் வழங்கப்படும் முறையை இந்த கோர்ஸ் பின்பற்றுகிறது. ஒவ்வொரு வாரத்தின் தொடக்கத்திலும் முதல் பாடம் நிகழும், அடுத்தடுத்த பாடங்கள் சீரான இடைவெளியில் அனுப்பப்படும்.

 

இந்த கோர்ஸில் இவை உள்ளடங்கும்

– 10 பாடங்கள்

– தினசரி பயிற்சி அமர்வுகள்

– வீட்டுப்பாடங்கள் / வீட்டுப்பணிகள்

– ரஞ்சித்துடன் 4 நேரலை வகுப்புகள்

– ரஞ்சித்தின் தனிப்பட்ட கருத்து’

 

வகுப்புகள் உங்களுக்குக் கிடைக்கும்போதெல்லாம் உங்கள் சொந்த வேகத்தில் நீங்கள் செய்யலாம்.

 

நேரலை வகுப்பு நேரங்கள் மட்டும் நிலையானதாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் இந்திய நேரப்படி மாலை 6.30 முதல் 7.30 வரை இருக்கும். இந்த நேரம் பொதுவாக இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஐரோப்பிய ஒன்றியம், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து கற்பவர்களுக்கு வசதியானது.

3. இந்தக் கோர்ஸ் யாருக்கானது?

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் அல்லது தமிழ் வழியில் கற்பதை சௌகரியமாக உணர்பவர்களுக்கு இந்தக் கோர்ஸ் வழங்கப்படுகிறது

4. இதில் நேரலை ஜூம் வகுப்புகள் உள்ளனவா?

இல்லை, தமிழ் கோர்ஸிற்கு நேரலை ஜூம் வகுப்புகள் வழங்கப்படுவதில்லை

5. PaatuClass ஆங்கிலத்திற்கும் PaatuClass தமிழிற்கும் என்ன வேறுபாடு?

இரண்டிற்கும் எவ்வித வேறுபாடும் இல்லை. PaatuClass ஆங்கில பேட்சில் உள்ளதை போலவே PaatuClass தமிழிலும் 4 நேரலை வகுப்புகள் உள்ளது.

6. இந்தக் கோர்ஸ் இலவசமானதா?

இல்லை, இது கட்டணம் செலுத்தவேண்டிய ஒரு கோர்ஸ், இதன் கட்டணம் நியாமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது

7. பேட்ச்சின் தொடக்கத்தேதி என்ன?

பதிவு செய்தவுடன் உடனடியாக கோர்ஸ் ஆரம்பிக்கும்

8. நான் தமிழ் கோர்ஸில் இருந்தாலும் நேரலை ஜூம் வகுப்புகளில் சேரலாமா?

நேரலை ஜூம் வகுப்புகள் ஆங்கிலத்தில் நடக்கும் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். எளிதான பேச்சுமொழி ஆங்கிலத்தை நீங்கள் புரிந்துகொள்ள முடிந்தால் இந்த வகுப்புகளில் இணைய உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. நேரலை ஜூம் வகுப்பில் சேருவதற்கு +91 98504 10065 என்ற எண்ணிற்கு Whatsapp செய்யவும் அல்லது [email protected] என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.

9. நான் பாட்டு கற்றுள்ளேன், PaatuClass எனக்கு பயனுள்ளதாக இருக்குமா?

PaatuClass அனைவரும் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு அனுபவமிக்க பாடகருக்கு, பாடுவதில் உள்ள நேர்த்தியான நுணுக்கங்களைக் கண்டறிய முடியும். எந்தெந்தப் பகுதிகளில் கவனம் செலுத்தலாம் என்பது குறித்து ரஞ்சித் தனிப்பயனாக்கப்பட்ட கருத்துக்களையும் தருகிறார்.

10. எனக்கு பாடுவதில் அனுபவம் இல்லை, நான் சேரலாமா?

PaatuClass அனைவருக்கும் ஏற்றது, உங்களுக்குத் தேவையானது பாடுவதற்கான விருப்பம் மட்டுமே. உங்களின் திறமையை மேம்படுத்த நாங்கள் உங்களுக்கு அடிப்படைகளை எடுத்துரைப்போம். நீங்கள் கண்டிப்பாகச் சேரலாம்.

11. PaatuClass க்கான அடிப்ப‌டைத் தொழில்நுட்பத் தேவைகள் என்ன?

ஒரு நிலையான இணைய இணைப்பு (குறைந்தது 1.5 mbps) மற்றும் ஒரு ஸ்மார்ட்போன் அல்லது ஒரு டேப்லெட் அல்லது ஒரு மடிக்கணினி.

Hi I’m Elby!

X